என் மலர்
நீங்கள் தேடியது "அச்சரப்பாக்கம் விபத்து"
- அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது ஒரு லாரி மட்டும் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- விபத்துக்குள்ளான லாரியில் இருந்து கீழே கொட்டி வீணான மதுபான மூலப்பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
மதுராந்தகம்:
திருச்சி மாவட்டம், காட்டூர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து மதுபானங்களை தயாரிக்கக் கூடிய மூலப்பொருளை ஏற்றிக்கொண்டு 5 லாரிகள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்து கொண்டிருந்தது.
அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது ஒரு லாரி மட்டும் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் மதுபான மூலப்பொருள் கொட்டி ஆறாக ஓடி வீணானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார்.
தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான லாரியில் இருந்து கீழே கொட்டி வீணான மதுபான மூலப்பொருளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






