என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 243003"

    • பி. வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

    இந்நிலையில், சந்திரமுகி 2 பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பி. வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. தற்போது சந்திரமுகி பாகம் இரண்டின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை தற்போது லைகா நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியானது.
    • சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2

    அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    லட்சுமி மேனன்

    லட்சுமி மேனன்

    இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பது குறித்து லட்சுமி மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×