search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swift Student Challenge"

    • சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் நடத்தப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சின் வெற்றியாளர்களை அறிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் WWDC23 நிகழ்வு துவங்க இருக்கும் நிலையில், இதுபற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை WWDC23 ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேல்ஞ்சில் இந்திய மாணவர் ஆஸ்மி ஜெயின் தேர்வாகி இருக்கிறார்.

    மார்டா மிஷெல் கலிண்டோ மற்றும் யெமி அகெசின் உடன் ஆஸ்மி ஜெயின் இந்த ஆண்டுக்கான ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சில் வெற்றி பெற்று இருக்கிறார். சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC23) நிகழ்வுக்காக ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்சை நடத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து தேர்வாகி இருக்கும் ஆஸ்மி ஜெயின், நாட்டின் மற்ற டெவலப்பர்களுக்கு உதவேகமாக திகழ்கிறார்.

    இந்த திட்டம் இளம் டெவலப்பர்கள் தங்களின் கோடிங் திறன் மற்றும் வித்தியாசமாக திட்டங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் டெவலப்பர்கள் இன்டராக்டிவ் பிளேகிரவுண்ட், செயலி அல்லது இதர மென்பொருள்களை ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரோகிராமிங் லாங்குவேஜ்- ஆன ஸ்விஃப்டில் உருவாக்க வழி செய்கிறது.

    ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் வெற்றியாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில் WWDC நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை கொண்டு டெவலப்பர்கள் தொழில்நுட்ப துறை தலைவர்களை சந்தித்தல், கலந்துரையாடல் அமர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் டெவலப்பர் சந்தா, பிரத்யேக WWDC ஜாக்கெட் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களை பெறலாம்.

    ×