என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspension of seizure"

    • ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலக ஜப்தி நிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
    • இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப் பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக 1987-ம் ஆண்டில் ராமநாத புரம் வண்டிக்கார தெருவை சேர்ந்த முருகேசன், உச்சிப் புளி அருகே தாமரைக் குளத்தை சேர்ந்த தனிக்கோடி ஆகியோரின் 97 சென்ட் நிலம் ராமநாத புரம் கோட்டாட்சியர் அலு வலக தனி தாசில்தாரால் கையகப்படுத்தப்பட்டது.

    அப்போது ஒரு சென்டிற்கு ரூ.103 நஷ்ட ஈட்டுத்தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை குறைவானது என இருவரும் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் 1988-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1993-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு சென்டிற்கு ரூ.900 வட்டி யுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆனால் இந்த தொகையை கொடுக்காத தால் நில உரிமையாளர்கள் மீண்டும் 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவின்படி ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 402 நில உரிமையாளர்கள் இருவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை.

    இதையடுத்து ராமநாத புரம் சார்பு நீதிபதி கதிரவன் கடந்த ஜூன் 1-ந்தேதி கோட்டாட்சியர் அலுவலக கம்ப்யூட்டர், மேஜைகள், ஜீப் ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டு முதுநிலை கட்டளை பணி யாளர் சரவணன், நில உரிமைதாரரின் வழக்கறி ஞர் ஜெயச்சந்திரன், நில உரிமைதாரர் தனிக்கோடி ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அவர்களிடம் கோட்டாட்சி யர் கோபு, தாசில்தார் முரு கேசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உடனடி யாக நிலத்திற்கான நஷ்ட ஈட்டுத்தொகை ரூ.4.30 லட்சத்திற்கான காசோலை வழங்குவதாகவும், மீதி தொகையை பின்னர் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப் பட்டது.

    ×