என் மலர்
நீங்கள் தேடியது "Surveyed and then measured the government land"
- 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
- நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பரவத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுடுகாட்டுக்கு செல்லபாதை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
அதன்பேரில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார் . அதைத்தொடர்ந்து சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் சதிஷ் குமார், நில அளவை அலுவலர் சார்லஸ் மற்றும் கிராம் உதவியாளர்கள் சென்று சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கான நிலம் உள்ளதா என ஆய்வு செய்து பின்னர் அரசு நிலத்தை அளவீடு செய்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் .






