என் மலர்
நீங்கள் தேடியது "survey by the head of municipality"
- நெற்குப்பையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பேரூராட்சி தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மண்டு கருப்பர் கோவில் தெருவில், காலனி தெருவில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக பேரூராட்சி மன்ற தலைவர் புசலான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூய்மை பணியாளர்கள் உதவியோடு தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இளநிலை உதவியாளர் சேரலாதன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.






