என் மலர்
நீங்கள் தேடியது "surrounded and arrested"
- பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
- வீட்டை சுற்றிவளைத்து வாலிபரை கைது செய்தனர்.
கடலூர்:
விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டி க்குப்பத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ் பேர்பெரியான் குப்பத்தில் கடந்த 31-ந் தேதி இரவு நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சினை தட்டினர். இதனை தட்டி க்கேட்ட டிரைவர் முருகனை தாக்கிவிட்டு பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்படி மானடிக்குப்பம் ராஜதுரை (24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர். அப்போ து பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஒடிவிட்டார்.
இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அறிவுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரைபாண்டியன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடிவந்தனர். தப்பி ஓடிய பிரவி ன்குமாரின் உறவினர்கள் வீடுகள் உள்ள சென்னை, விழுப்புரம் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பிரவின்குமார் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக விழுப்புரம் சென்ற போலீசார் அந்த வீட்டினை சுற்றிவளைத்து நேற்று நள்ளிரவு கைது செய்தனர். விழுப்புரம் பகுதியில் நள்ளிரவில் போலீசார் ஒரு வீட்டை சுற்றிவளைத்து வாலிபரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






