என் மலர்
நீங்கள் தேடியது "supplying ganja"
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- புகழ்வாணனிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளக்காட்டு புதூர் சோளியம்மன் கோவில் அருகில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரித்த போது தர்மபுரி மாவட்டம் பொய்யாபட்டி பகுதியை சேர்ந்த புகழ்வாணன் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் காங்கேயம் ரோடு நாச்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்தது தெரியவந்தது. புகழ்வாணனிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






