search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SUN DURING THE DAY AND RAIN AT NIGHT"

    • திருச்சியில் கடந்த 2 நாட்களாக பகலில் கொளுத்தும் வெயில், இரவில் பலத்த மழை என மாறும் சீேதாஷ்ண நிலையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    • மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலை மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த போதிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    குறிப்பாக மத்திய மாவட்டமான திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி வெயில் பதிவானது. இந்தநிலையில் வெப்பச்ச–லனம் காரணமாக கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி, மின்னல் மற்றும் லேசான சாரல் மட்டுமே பெய்தது.

    நேற்று இரவு திருச்சி மாநகர் பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது.

    மணப்பாறை, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், திருச்சி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக லால்குடி, துவாக்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் 270 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பகலில் 101 டிகிரி வெயில், இரவில் வெளுத்து வாங்கிய மழை என மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலை மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×