search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sukravaram vratham"

    சம்பத் சுக்ர பூஜை செய்து விரதமிருப்பவர்கள் தேவி மஹாலட்சுமியின் அருளால் புத்திர பாக்கியம் மற்றும் சகல விதமான சம்பத்துக்களும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்க்கை வாழ்வர்.
    சம்பத் சுக்ர வார விரத பூஜை மத்வ சம்பிரதாயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழிவழியாக பெரும்பாலான குடும்பங்களில் இதை கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.

    ஆடிமாதம் அல்லது தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படும் இப்பூஜை வரலட்சுமி விரத பூஜையின் ஒரு மறுவடிவம் எனலாம். சங்கல்யம், த்யான ஸ்லோகம், கலச ஸ்தாபனம், நைவேத்யம் என சில வழிமுறைகளில் மட்டும் வித்தியாசத்தை காணலாம்.

    இப்பதிவின் முக்கிய நோக்கம் இப்பூஜையின் சிறப்பை அனைவரும் அறியவேண்டும் என்பதே. மஹாலட்சுமியின் நிலையான கருணாகடாக்ஷ பாக்கியத்தை பெற சம்பத் சுக்ர வார பூஜையை ஆடி மாதத்தில் செய்வத மிகவும் உசிதமாக கருதப்படுகிறது. சம்பத் சுக்ர பூஜை செய்து விரதமிருப்பவர்கள் தேவி மஹாலட்சுமியின் அருளால் புத்திர பாக்கியம் மற்றும் சகல விதமான சம்பத்துக்களும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்க்கை வாழ்வர்.
    ×