search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide husband"

    முத்திரையர் பாளையத்தில் குடிக்க மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் தூக்குபோட்டு இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பாளையம்  காந்திதிருநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது57). கொத்தனார். இவருடைய மனைவி  கலையரசி கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சுந்தரமூத்தி தினமும் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல்  இருந்து வந்தார். மேலும் மனைவி கலையரசியிடம் மதுகுடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சுந்தரமூர்த்தி வேலைக்கு செல்லாமல்  குடிப்பதற்கு  மனைவியிடம் பணம் கேட்டார். அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜன்னல் கதவில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து மகன் முருகன் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது உள்ளே சென்று பார்த்த போது  ஜன்னல் கதவில் சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். 

    உடனே  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுந்தரமூர்த்தியை தூக்கில் இருந்து கீழே இறக்கி உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து கலையரசி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×