என் மலர்
நீங்கள் தேடியது "SUBRAMANIA SWAMY TEMPLE KUMBABHISHEKAM"
- குன்னம் அருகே மருவத்தூர் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ேகாவில் புதிதாக கட்டப்பட்டது.
- விஸ்வரூப தரிசனம், கும்ப திருவாராதனம், சுப்பிரமணியர் அர்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடும், விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருவத்தூர் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ேகாவில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் விநாயகர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, புண்ணியாக வாசனமும், அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், எந்திர பிரதிஷ்டையும் நடைபெற்றது.
நேற்று காலை விஸ்வரூப தரிசனம், கும்ப திருவாராதனம், சுப்பிரமணியர் அர்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடும், விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
விழாவில் மருவத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






