என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Inauguration Ceremony"

    • ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.
    • பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பதவியேற்பு மற்றும் உறுதிமொழியினை வழங்கினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தலைவர் ம.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், பெண்கள்பள்ளி முதல்வர் கோமதி, வித்யா பவன் பள்ளியின் முதல்வர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பதவியேற்பு மற்றும் உறுதிமொழியினை வழங்கி பேசியதாவது:-

    மாணவ பருவத்தில் தங்கள் காதுகளில் விளைகின்ற இரு பொருள் தரும் வாக்கியங்களை நன்மைக்கு தரும் பொருள் நன்மை தராபொருள் எது என பகுத்தாய்ந்து அதன்படி நடந்தால் வாழ்வில் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்றார்.

    விழாவில் முன்னதாக பள்ளி முதல்வர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார். இறுதியில்ஒ ருங்கிணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

    விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மருததுரை, செல்வராணி, துறைத் தலைவர்கள்ந ல்லேந்திரன், முத்துக்குமார், பாலகிருஷ்ணன், மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×