என் மலர்
நீங்கள் தேடியது "students darna struggle"
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாகவும் கூறப்படுகிறது.
- இதுபற்றி அந்த மாணவி தெரிவித்ததால் உடன்படிக்கும் மாணவிகள் இன்று மதியம் கல்லூரி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளராக டாஸ்வின் (45) என்பவர் இருந்து வருகிறார்.
இவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தெரிவித்ததால் உடன்படிக்கும் மாணவிகள் இன்று மதியம் கல்லூரி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாசில்தார் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி தாளாளரிடம் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருந்த போதிலும் மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரி தாளாளரை உடனடியாக அழைத்து வந்து எங்கள் முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.






