என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students adventure"

    • கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
    • மாணவர்களின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு பஸ்சில் செல்கின்றனர்.

    அதே போல் ஒடுகத்தூர் அருகே அகரம் கூட்ரோடு பகுதியில் இயங்கிவரும் அரசு கல்லுரி மாணவர்கள் சிலர் அரசு பஸ்ஸின் படியில் நின்று சாகசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது சாலை விபத்தில் ஏற்ப்படும் இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இச்செயலில் ஈடுப்படுவது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்ப்படுத்துகின்றது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக்காக்க, கல்லூரி முடிவடைந்த வீடு திரும்பும் நேரத்தில் அப்பகுதியில் போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் மேலும் சாகசத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் கல்லூரி முடிவடையும் நேரத்தில் அப்பகுதியில் அரசு பஸ் இயங்க வில்லை என கல்லூரி மாணவர்கள் கூறிவருகின்றனர்.

    எனவே குடியாத்தம் - ஒடுகத்தூர் பகுதிக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×