search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student teacher"

    • ஒரு மாணவி ஆசிரியையின் தலைக்கு அருகில் அமர்ந்து அவருக்கு விசிறி கொண்டிருக்கிறார்.
    • ஆசிரியர்களே இப்படி இருக்கும் போது பாடம் கற்பிப்பது எப்படி இருக்கும்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள தானிபூர் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

    இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாய் விரித்து தூங்குவதும், அவருக்கு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக விசிறி கொண்டிருப்பது போன்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அதில், ஒரு மாணவி ஆசிரியையின் தலைக்கு அருகில் அமர்ந்து அவருக்கு விசிறி கொண்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பயனர் ஒருவர், 'ஆசிரியர்களே இப்படி இருக்கும் போது பாடம் கற்பிப்பது எப்படி இருக்கும். வெயிலில் இருந்து விடுபட அப்பாவி குழந்தைகளை விசிற வைக்கிறார் ஆசிரியை' என விமர்சித்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்வி அதிகாரி ராஜேஷ் குமார் சிங் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×