search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm Warning Center"

    சென்னை எழிலகத்தில் புயல் எச்சரிக்கை தகவல் மையத்தை இன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். #MinisterUdhayakumar #CycloneGaja
    சென்னை:

    சென்னையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நாகை அருகே இன்றிரவு கடக்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கியம் என்பதால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள், கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் எல்காட் நிறுவனம் மூலமாக ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை இன்று எழிலகத்தில் தொடங்கி வைத்தேன்.



    பேரிடர் காலங்களில், ஆபத்து நெருங்குவதற்கு முன்பாகவே, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசித்து வரும் ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்று திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உரிய எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறச் செய்து உயிரிழப்புகளை பெருமளவில் குறைப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல்சார் தகவல் மையங்களிலிருந்து பெறப்படும் எச்சரிக்கை தகவல்களை ஒலி அலைகள் மூலமாகவும் முன்பதிவு ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும், நேரடி ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடையும் வகையில் இது செயல்படும். மேலும் இவ்வமைப்பின் சிறப்பு அம்சமாக பேரிடரால் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும், பிரத்யேக அவசர தகவலை மென்பொருள் மூலம் தேர்வு செய்து அனுப்ப இயலும்.

    புயல் சம்பந்தமாக யாரேனும் வீண் வதந்தி பரப்பினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

    புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 5067 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayakumar #CycloneGaja
    ×