search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stop Death Penalty"

    எகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. #Egypt #UNUrges #DeathPenalty
    ஜெனீவா:

    எகிப்தில் கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் இதுவரை 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர்களிடம் சித்ரவதை செய்து வலுக்கட்டாயமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று இருந்ததாகவும், வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தாமலும் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு எட்டியது. இதைத்தொடர்ந்து எகிப்து அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு அந்த நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளது.

    இது குறித்து மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கால்வில்லே கூறுகையில், ‘மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதே ஐ.நா.வின் பொதுவான நிலை. எனினும் சர்வதேச சட்டங்களின்படி மரண தண்டனை அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை இல்லை, சித்ரவதை, வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறுதல் போன்ற பிரச்சினைகள் உள்ளன’ என்று தெரிவித்தார்.
    ×