என் மலர்
நீங்கள் தேடியது "stolen cell phones"
- பறிமுதல் செய்த செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு கமிஷனர் நஜ்மல்ஹோடா தலைமை தாங்கினார்.
சேலம்:
சேலம் மாநகரத்தில் செல்போன் திருடிய நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கமிஷனர் நஜ்மல்ஹோடா தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 92 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோதா கூறியதாவது:-
சேலம் மாநகரத்தில் மர்ம நபர்களால் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தவுடன் அந்த புகார் பதிவு செய்யப்பட்டு சைபர் க்ரைம் பிரிவு போலீசார் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தொலைந்துபோன அல்லது பறித்துச் சென்ற செல்போனை மற்றொருவர் பயன்படுத்தும்போது அதில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் தகவல் சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் சேலம் மாநகரத்தில் இந்த 92 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.






