என் மலர்

  நீங்கள் தேடியது "SPEICAL CAMP"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி இந்து மிஷன் மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் நடைபெற்றது
  • தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறது

  திருச்சி:

  திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் கிளப், திருச்சி தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோயை கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் இன்று காலை தொடங்கியது.

  தங்கமயில் ஜூவல்லரி முதன்மை இயக்க அதிகாரி ரோட்டேரியன் வி.விஷ்வா நாராயணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

  அப்போது, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

  ஒரு எந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள முடியும். தொடர்ச்சியாக 4 நாட்கள் 100 பேருக்கு பரிசோதனை செய்து அதனை ஜெட்லீ புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்ய இருக்கிறோம்.

  4-வது நாள் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்றார்.

  இந்து மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகி சுப்பிரமணியம், திருச்சி இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் வள்ளியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தலைவர் கவிதா நாகராஜன், செயலாளர் மீனா சுரேஷ் , ரோட்டேரியன் நாகராஜன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூஸ் சேகர், சி.ஜி.ஆர்.உமா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  ×