என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPEECH CONTEST ON KARUNAIDHI BIRTHDAY"

    • கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டி நடை பெற்றது.
    • மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டது.

    பெரம்பலூர்:

    நாட்டின் விடுதலை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டது.

    இதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் மாவட்ட அளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்.

    பெரம்பலூர் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா தலைமையுரையாற்றினார். போட்டிக்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அன்பழகன், கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் கலியமூர்த்தி , ரேவதி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

    இந்த போட்டியில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு பயிலும் காயத்ரி என்ற மாணவி முதல் பரிசினையும் (ரூ.5,000),

    தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு உணவு தொழில் நுட்பம் பயிலும் யோகேஷ் என்ற மாணவன் இரண்டாம் பரிசினையும் (ரூ.3,000), வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு ஆண்டு பயிலும் இ. பூபாலன் என்ற மாணவன் மூன்றாம் பரிசினையும் (ரூ.2,000) பெற்றனர்.

    ×