என் மலர்
நீங்கள் தேடியது "SPECIAL PETITION CAMP AT POLICE STATION"
- போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது
- மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியின் மேற்பார்வையில் போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், சஞ்சீவ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
முகாமில் பெறப்பட்ட 25 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில்,
இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்."






