என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SPEAKER TRAINING"
- திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது
- சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் பேச்சாளர் ஆவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்
திருச்சி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம் தலைமை தாங்கினார்.
மெஹருனிஷா ஆலிமா இறை வசனம் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் ரஹிமா ஷாகுல் வரவேற்றார்.
மகளிர் அணி மாவட்ட தலைவர் பைரோஸ் துவக்க உரை நிகழ்த்தினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் பேச்சாளர் ஆவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பிலும், பேராசிரியர் மைதீன் அப்துல் காதர் மேடைப் பேச்சாளர் ஆவது எப்படி என்ற தலைப்பிலும்,
இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஷேக் முகமது கௌஸ் தலைமைத்துவ பண்புகள் என்ற தலைப்பிலும் பேசினர்.
மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ஆரிபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, இளைஞரணி மாவட்ட பொருளாளர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜாபர் ஷெரீப், அலாவுதீன், நவாப்கான், நியாஸ் அகமது, ஆரிப் ஆகியோர் செய்திருந்தனர்.