search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Korea missile test"

    • வசிப்பிடம் அருகே கீழே விழுந்து வெடித்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
    • ஏவுகணை தோல்வி குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

    சியோல்:

    அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்றுஅதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. வட கொரியாவின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க படைகளுடனான பயிற்சியின் போது, ​​தென் கொரிய ராணுவம் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஹியூமூ-2 ஏவுகணையை வீசி சோதனை செய்தது. எனினும் அது குறிப்பிட்ட இலக்கை அடையாமல் தென் கொரியாவின் கடலோர நகரமான கங்னியுங் பகுதியில் கீழே விழுந்து வெடித்ததால் அந்த பகுதியில் வசிப்போர் பீதியடைந்தனர்.

    இந்த ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய ராணுவம் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் இது வடகொரியாவின் தாக்குதலாக இருக்க கூடும் என்றும் தென் கொரிய மக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து பேசிய கங்னியுங் பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி குவான் சியோங்-டாங், ஏவுகணை தோல்வி குறித்து ராணுவம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனிடையே ஹியூமூ-2 ஏவுகணை, புறநகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் விழுந்ததாகவும், இந்த விபத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தென் கொரிய கூட்டுப்படை தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×