search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small playground"

    • சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • சிவன்மலை தி.மு.க. கிளை செயலாளர் சிவகுமார் உள்பட உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்: 

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம், சிவன்மலை ஊராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.3கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிவன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழ்நாட்டில் 10 இடங்களில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற த்தொகுதியில் சிவன்மலை கிராமத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 6.56 ஏக்கர் நிலப்பரப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

    இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீ ஓடுதள பாதை, கால்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கபாடி ஆகிய விளையாட்டுகளுக்கு மைதானம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி, அலுவலக அறை, பொருள் பாதுகாப்பு அறை, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உடை மாற்றும் அறை, கழிவறை வசதிகளுடன் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

    காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர்,காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தன், நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர் ராஜகோபால், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகரன், விமலாதேவி, சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், சிவன்மலை தி.மு.க. கிளை செயலாளர் சிவகுமார் உள்பட உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    ×