என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நப்தலி பென்னெட்"

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் தீப ஒளியேற்றி அங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினருக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இனிய நண்பர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் உலகெங்கும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, நப்தலி பென்னெட்டின் தீபாவளி வாழ்த்துக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

    கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட், இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலம். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேருங்களேன் என அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    பருவநிலை மாநாட்டின் இடையே பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    கிளாஸ்கோ:

    ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 

    மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய நப்தலி பென்னெட், எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும் பிரபலமான நபர். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் சிரித்தார்.

    அதன்பின், இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×