என் மலர்
நீங்கள் தேடியது "நைட் ரைடர்ஸ்"
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் மாத்யூ தாமஸ் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் , ப்ரோமான்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக நைட் ரைடர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபல படத்தொகுப்பாளரான நவ்ஃபல் அப்துல்லா இயக்கியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் மலையாள இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான வேடன் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ படத்தில் நடித்துத் திறமையை நிரூபித்த மீனாக்ஷி உண்ணிகிருஷ்ணன், இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இதில் அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், ரோஷன் ஷணவாஸ், ஷரத் சபா, மெரின் பிலிப், சினில் சைனுடீன், நௌஷாத் அலி, சைத்ரா பிரவீன் மற்றும் நஸீர் சங்கராந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
திரைப்படத்தின் ஒளிப்பதிவை அபிலாஷ் ஷங்கர் மேற்கொண்டுள்ளார். சிறப்பாக, இந்தப் படத்தின் எடிட்டிங் பணியையும் இயக்குநர் தானே செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை யாக்சன் கேரி பெரெய்ரா மற்றும் நேஹா எஸ். நாயர் இணைந்து அமைத்துள்ளனர்.
உள்ளக்கல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நிசார் பாபு மற்றும் சஜின் அலி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் மாத்யூ தாமஸ் முக்கியமானவர்.
- இவர் நடிப்பில் அடுத்து நைட் ரைடர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் மாத்யூ தாமஸ் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் , ப்ரோமான்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் அடுத்து நைட் ரைடர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபல படத்தொகுப்பாளரான நவ்ஃபல் அப்துல்லா இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஃபைட் தி நைட் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
படத்தில் நாயகன் மாத்யூ தோமஸ் முந்தைய படங்களில் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டஉறுதியான தோற்றத்தில் காணப்படுகிறார்.