என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரையம்ப் ஸ்பீடு"

    • டிரையம்ப் ஸ்பீடு T4 பைக்கில் 398.15 சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
    • 5,000 ஆர்பிஎம்மில் சுழலும் போது 36 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

    இந்தியாவில் ஸ்பீட் T4-க்கு பாஜா ஆரஞ்சு என்ற புதிய நிறத்தை டிரையம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வடிவமைப்பு அல்லது இயந்திர மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் இது மற்ற மாடல்களில் காணப்படும் அதே எஞ்சின் மற்றும் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டிரையம்ப் பாஜா ஆரஞ்சு வேரியண்ட் ரூ.1.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது.

    டிரையம்ப் ஸ்பீடு T4: எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்

    டிரையம்ப் ஸ்பீடு T4 பைக்கில் 398.15 சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 7,000 ஆர்பிஎம்மில் 30.6 ஹெச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் சுழலும் போது 36 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

    டிரையம்ப் ஸ்பீடு T4: அம்சங்கள்

    டிரையம்ப் ஸ்பீட் T4, முழு LED ஹெட்லேம்ப், LED DRL மற்றும் பின்புற லைட் சிக்னேச்சர் மற்றும் ஒருங்கிணைந்த LCD திரையுடன் கூடிய அனலாக் ஸ்பீடோமீட்டரைப் பெறுகிறது. இது அதன் நியோ-ரெட்ரோ ஆளுமையை பராமரிக்கிறது. இது USB போர்ட், டூயல்-சேனல் ABS மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது.



    டிரையம்ப் ஸ்பீடு T4: வண்ண விருப்பங்கள்

    முன்னதாக, ட்ரையம்ப் ஸ்பீட் T4 நான்கு வண்ண விருப்பங்களை மட்டுமே கொண்டிருந்தது - காஸ்பியன் ப்ளூ / பேர்ல் மெட்டாலிக் ஒயிட், லாவா ரெட் க்ளாஸ் / பேர்ல் மெட்டாலிக் ஒயிட், பாண்டம் பிளாக் / பேர்ல் மெட்டாலிக் ஒயிட், மற்றும் பாண்டம் பிளாக் / ஸ்டார்ம் கிரே. தற்போது பாஜா ஆரஞ்சு என்ற புதிய நிறத்தைப் பெறுகிறது.

    டிரையம்ப் ஸ்பீடு T4: விலை மற்றும் போட்டியாளர்கள்

    ட்ரையம்ப் ஸ்பீடு T4 பைக் ரூ.1.99 லட்ச ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது ஹார்லி-டேவிட்சன் X440, யெஸ்டி ரோட்ஸ்டர், ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 மற்றும் ஜாவா 42 FJ 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

    ×