என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்கட்சிகள் வெளிநடப்பு"
- பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது.
- வினேஷ் போகத் பிரச்சினையை கிளப்பி பேச முயன்றனர்.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத் எடை பிரச்சினையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது. பாராளுமன்றத்திலும் நேற்று எழுப்பப்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்றும் வினேஷ் போகத் விவகாரம் எதிரொலித்தது. மேல்சபை கூடியதும் எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சினையை கிளப்பி பேச முயன்றனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள்? என்பதை அறிய விரும்பு கிறேன் என்று கார்கே கூறினார்.

இந்த பிரச்சினையை எழுப்ப அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்க வில்லை. இதனால் எதிர் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அதை தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சில பிரச்சினைகளை எழுப்ப நின்றார். ஆனால் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்கவில்லை.

தன்கர் கூறும்போது, நீங்கள் நாற்காலியை நோக்கி கத்துகிறீர்கள். உங்கள் நடத்தை சபையில் அசிங்க மாக உள்ளது. உங்கள் செயலை கண்டிக்கிறேன் என்று கூறி எச்சரித்தார்.
எதிர்கட்சி உறுப்பினர் களின் நடத்தை குறித்து வேதனையை வெளிப் படுத்திய ஜெகதீப் தன்கர் சிறிது நேரம் அவையிலிருந்து வெளியேறினார்.






