என் மலர்
நீங்கள் தேடியது "குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்"
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
- மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு பின்னல் சதி உள்ளது என்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பின்னால் சதி இருக்கிறது. எங்களைப் போன்ற மல்யுத்தம், பாக்ஸிங் வீரர்களால் ஒரே இரவில் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும். 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எடையை குறைப்பது மிகவும் கடினம்தான். ஆனால், பசியையும், தாகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நானும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளேன். இதுபோல ஒன்றை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. இந்தியா விளையாட்டில் சிறந்த நாடாக உயர்வதை விரும்பாத சிலர் சதி செய்திருக்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.






