என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடூர தண்டனை"

    • மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் சோட்கி இப்ராடிஹிம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தண்டனை அளிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் மும்பையில் வேலை பார்ப்பதாகவும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் தொடர்பில் இருந்த ஆணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதாக விசாரணை தெரிய வந்துள்ளது

    இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில், அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலைமுடி வெட்டப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தண்டனை வழங்கியபோது அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    காவல் நிலையப் பொறுப்பாளர் நந்த் லால் சிங் அளித்த புகாரின் பேரில், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×