என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊசி முறிந்தது"

    • மாணவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது.
    • சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.

    அம்பத்தூர்:

    பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகன் சூரிய பிரகாஷ் (21). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூரியபிரகாஷ் தடுப்பூசி போட சென்றார். அவருக்கு நர்சு ஒருவர் தடுப்பூசியை இடுப்பில் போட்டதாக தெரிகிறது. அப்போது ஊசி உடைந்து உடலுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.

    உரிய சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்திலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மாணவரின் தந்தை புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×