என் மலர்
நீங்கள் தேடியது "பருவ மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள்"
- 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவி யர்கள் பங்கேற்றனர்
- 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடத்தூர் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 2-ம் பருவ மன்ற செயல்பாடு களுக்கான போட்டிகள் நடைபெற்றது.
இதில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் மற்றும் வினாடி வினா ஆகிய தலைப்புகளின் கீழ் 10 போட்டிகள் நடை பெற்றது. இந்நிகழ்வில் கடத்தூர் வட்டாரத்தில் இருந்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ, மாணவி யர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 30 மாணவர்கள் வீதம் 32 பள்ளிகளில் இருந்து சுமார் 720-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மணி, வட்டார கல்வி அலுவலர் கள் மகேந்திரன், முருகன், மேற்பார்வை யாளர் விஜய குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடுவர்களாக இருந்து நடத்தி வைத்தனர்.






