என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது மாப்பிள்ளை பலி"

    • நேற்று வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • உயிரிழந்த கெர்மனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று பியூலா என்ற மனைவி உள்ளார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் வசித்து வருபவர் பொன்ராஜ் மகன் ஜான் சுந்தர் என்ற கெர்மன் (வயது 31). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    தற்போது மழை காலம் என்பதால் வேலை மிகவும் குறைவாக இருந்ததால் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு பழைய கட்டிடத்தில் பொருட்களை இடித்து எடுப்பதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

    நேற்று வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கெர்மன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கெர்மனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று பியூலா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    ×