என் மலர்
நீங்கள் தேடியது "நிலங்களை சேதம்"
- விவசாய நிலங்களை சேதபடுத்தியதால் நடவடிக்கை
- மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. ஒடுகத்தூர், குருவராஜபாளையம் ஆசனம்பட்டு, மேல் அரசம்பட்டு, ராசி மலை மற்றும் அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைந்தன.
விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கத்திரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்துவதோடு, கிராம பகுதியில் ஒட்டியுள்ள மரங்களில் தஞ்சமடைந்து பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வந்தனர். விவசாய பயிர்கள் அதிக அளவில் நாசமாவதால், குரங்குகளை பிடித்து வனத்துறையில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி இன்று ராசிமலை அடிவாரத்தில் உள்ள அரிமலை உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வந்தனர். வனத்துறையினர், 20 குரங்குகளை ஒவ்வொன்றாக பிடித்து, கூண்டுக்குள் அடைத்தனர்.
பிடித்த குரங்குகளை வனத்துறையினர் குருராஜபாளையம் அருகே உள்ள தர்மகொண்ட ராஜா கோயில் மலைப் பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.






