என் மலர்
நீங்கள் தேடியது "விக்கல் எதனால் ஏற்படுகிறது"
- அளவுக்கு அதிகமாக ருசிக்கும்போதும் கூட சிலருக்கு விக்கல் வரலாம்.
- சுவாசக் காற்றில் தடை ஏற்படும்போது விக்கல் உண்டாகும்.
விக்கல் வருவது உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடாகும். யாரோ நம்மை நினைப்பதால் தான் விக்கல் வருகிறது என்ற கருத்து பலரிடம் உள்ளது. உணர்ச்சி மிகுந்த சூழ்நிலையில் இருக்கும் போதும், ஒரு குறிப்பிட்ட சுவையை அளவுக்கு அதிகமாக ருசிக்கும்போதும் கூட சிலருக்கு விக்கல் வரலாம்.
நம்முடைய சுவாச செயல்பாட்டில், காற்றை உள் இழுக்கும்போது மார்புத் தசைகள் விரிவடையும். அப்போது மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள 'உதரவிதானம்' என்ற சவ்வு பகுதியும் சேர்ந்து விரியும். இதன்மூலம் தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறந்து, நுரையீரலுக்குள் உள்ள காற்றின் அழுத்தம் குறையும். இதன் காரணமாக நுரையீரலுக்குள் அதிக காற்று சென்று சுவாசம் சீராக நடைபெறும்.
சில நேரங்களில் மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள், உதரவிதானத்தை உரசும்போதோ அல்லது உதரவிதான பகுதியில் எரிச்சல் ஏற்படும்போதோ, மூளையின் இயல்பான கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக சீரற்று செயல்பட ஆரம்பிக்கும். அப்போது குரல்நாண்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய இடைவெளி வழியாக நுரையீரலுக்குள் சென்று திரும்பும் சூழல் உண்டாகும். இவ்வாறு சுவாசக் காற்றில் தடை ஏற்படும்போது விக்கல் உண்டாகும். இவ்வாறு அடிக்கடி விக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
நாம் வேகமாக உணவு சாப்பிடும்போதும், சூடான பானத்தை குடிக்கும்போதும், உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவு குறையும்போதும், சுவாச செயல்பாடு சீரற்ற நிலையில் இருக்கும். அத்தகைய சமயங்களில் இயல்பாக விக்கல் உண்டாகும்.
* தொடர்ந்து அல்லது அடிக்கடி விக்கல் ஏற்படுவது நோயின் அறிகுறியாக வும் இருக்கலாம். உதாரணமாக, இரைப்பை புண் கள் (அல்சர்), குடல் அடைப்பு, சிறுநீரகக் கோளாறு அல்லது ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும் போதும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று உண்டாகும் போதும், கல்லீரல் கோளாறு, நுரையீரல் அழற்சி, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி போன்றவற்றின் அறிகுறியாகவும் தொடர் விக்கல் வரும் உணர்வு உண்டாகும்.
* மன அழுத்தம், திடீரென ஏற்படும் வெப்ப நிலை மாற்றத்தால் நம் உடலில் ஏற்படும் வறட்சி காரணமாகவும் விக்கல் உண்டாகும்.
* உட்கார்ந்த நிலையில் முழங்கால்களை உடலுடன் சேர்த்து அணைத்தவாறு பிடிப்பதன் மூல மாக விக்கலை நிறுத்த முடியும்.






