என் மலர்
நீங்கள் தேடியது "சம்பள நிலுவை தொகை"
- சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
- இதுவரை 11 வார சம்பளம் வழங்கப்பட்டு விட்டது
திருப்பூர்:
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கிராம ஊராட்சிகள் வாயிலாக 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் முட்புதர், செடி கொடிகளை அகற்றுவது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு மண் வேலைகள் இத்திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 16 வாரமாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் 100 நாள் திட்ட பணியாளர்கள் விரக்தியில் இருந்தனர். இந்நிலையில் படிப்படியாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 வார சம்பளம் வழங்கப்பட்டு விட்டது என கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






