என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் மீது கார் மோதி"

    • நத்தத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • இவரும் மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கும் சர்வீஸ் வந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் அருகே கொசவபட்டியைச் சேர்ந்தவர் வினித் (வயது 30). இவர் நத்தத்தில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜயகுமார் என்பவரும் சர்வீஸ் வந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றனர்.

    நத்தம், - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பகுதியில் சென்ற போது துவரங்குறிச்சியில் இருந்து வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×