என் மலர்
நீங்கள் தேடியது "பென்னிகுயிக் சமாதி"
- முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் சமாதி, சிலையை சீரமைக்க ஏற்பாடு செய்வேன்.
- லண்டன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செல்லூர் ராஜூ தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மதுரை
லண்டன் சென்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அங்குள்ள பென்னிகுயிக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன் வீடியோ பதிவின் மூலம் பேட்டி அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு-
புரட்சித்தலைவி அம்மா, பொதுசெயலாளர் எடப்பாடியாரின் ஆசியால் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு திட்டங்களை பெற்று தந்துள்ளேன். தற்போது மதுரை மக்கள் 50 ஆண்டுகள் குடிநீர் பிரச்சினை இன்றி வாழ முல்லை பெரியாறு அணை யில் இருந்து 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை செய்யும் அற்புதமான திட்டமும் கொண்டு வரப் பட்டுள்ளது. இதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .
5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் வெள்ளையர்களில் நல்ல மனம் படைத்த, கடவுள் போன்று போற்றக்கூடிய ஜான் பென்னிகுயிக் அவர்கள். அவர்களது இந்த கல்லறையை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த தற்காக ஆண்டவனுக்கும், புரட்சித்தலைவி அம்மா வுக்கும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜான் பென்னிகுயிக் அவர்களின் கல்லறையை பார்க்கும்போது மிகுந்த மன வருத்தம் அடைகிறேன். இந்த கல்லறையும் அவரது சிலையையும் சீரமைத்து கொடுப்பதாக தி.மு.க. அரசு உறுதியளித்தது. ஆனால் அதற்குரிய பணத்தை செலுத்தவில்லை என்று ஆலய கமிட்டியினர் என்னிடம் தெரிவித்தனர்.
இது மிகுந்த வருத்தத் திற்குரிய நிகழ்வாகும். தி.மு.க. அரசு வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எல்லோருக்குமே அல்வா கொடுத்துள்ளது. அதே பாணியில் பென்னிகுயிக் சிலை மற்றும் சமாதியை பராமரிப்போம் என்று கூறிவிட்டு இப்போது அதையும் செய்யாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
அரசு செய்யாவிட்டால் நானே முன் நின்று அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடியாரின் ஆலோசனையை பெற்று பென்னிகுயிக் அவர்களின் சமாதி மற்றும் சிலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்வேன். இதனை எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
தமிழகத்தில் எடப்பாடி யார் மீண்டும் முதல்-அமைச்சரானதும் இந்த பணிகள் நடைபெறும் வகையில் அதற்கு முன்ன தாகவே மக்களிடம் நிதி திரட்டி பென்னிகுயிக் அவர்களின் சமாதி மற்றும் சிலைகளை சீரமைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்






