என் மலர்
நீங்கள் தேடியது "நாடக நிகழ்ச்சி"
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழ புரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் உலக மரபு வார விழா தொடங்கியது.
- ராஜேந்திர காவியம் என்னு ம் பரிசுகள் நாட கத்தை தமிழ் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேற்றினர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழ புரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் உலக மரபு வார விழா தொடங்கியது.
இந்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்து றை ,திருச்சி வட்டம் மற்றும் தமிழ்நாடு தமிழக தொல்லி யல் துறையால் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் ஆயிரம் மாலை வெள்ளகுளம் அக்சரா வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் ராஜேந்திர காவியம் என்னு ம் பரிசுகள் நாட கத்தை தமிழ் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேற்றினர்.
இவ்விழாவில் நேஷனல் கல்வி குழும தாளாளர் சிலம்பு செல்வன், மேலாளர் மனோபாலன், செயலாளர் சங்கரநாராயணன், துணைச் செயலாளர் கண்ணன், பள்ளி முதல்வர் தாமஸ் டைனிட்டி வர்கீஸ் ,பள்ளி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், நெல்லி ஆண்டவர் முதல்வர் முனு ஆதி ,அமிர்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தொல்லியல் துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகம், வில்லு ப்பாட்டு, பரதநா ட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.






