என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைகளின் தரம்"

    • விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
    • பயிரின் எண்ணிக்கையும் அதன் முளைப்புத்திறனை பொருத்தே அமைகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரணத்திற்கான காசோலையினையும், 2 நபர்களுக்கு ரூ.18 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 484 மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×