என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்"

    • 4 வீதிகளிலும் இருந்து சூரன்கள் புறப்பட்டு முருகனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
    • பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டும் அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

    பழனி:

    பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழா கிரி வீதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு 4 வீதிகளிலும் இருந்து சூரன்கள் புறப்பட்டு முருகனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். முடிவில் சூரன்களை முருகன் வதம் செய்து வெற்றிவாகை சூடுவார்.

    இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டும் அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

    விழா நடைபெறும் பகுதியில் இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    விழா நிறைவடையும் வரை இப்பகுதியில் யாரும் மீண்டும் கடைகள் அமைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×