என் மலர்
நீங்கள் தேடியது "போதையில் வாலிபர்"
- போதையில் வாலிபருக்கு பீர் பாட்டில் அடி விழுந்தது.
- அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் லட்சுமியாபுரத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் தனது தம்பியான அருண்பாண்டியுடன் அங்குள்ள பெட்டிக்கடை அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயம் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த துரைசாமிபுரத்தை சேர்ந்த அபிஷேக் (22) என்பவர் வாயில் பத்தியை வைத்துக்கொண்டு பட்டாசு வெடித்தவாறும், பீர் அருந்திக்கொண்டும் சென்றுள்ளார். இதனை ஹரிகிருஷ்ணன் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அபிஷேக், பீர் பாட்டிலால் ஹரிகிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் விசா ரித்து வருகிறார்கள். ஹரிகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.






