என் மலர்
நீங்கள் தேடியது "இலவச ரேசன் திட்டம்"
- பிரதமர் மோடிக்கு கவுன்சிலர் அய்யப்பன் நன்றி
- 80 கோடி ஏழை மக்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.
என். ஜி. ஓ. காலனி :
குமரி மாவட்ட பா.ஜ.க பொருளாதார பிரிவு தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான அய்யப்பன் கூறுகையில்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020 -ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 50 வது வார்டு பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கவுன்சிலர் அய்யப்பன் பிரதமர் மோடி க்கு நன்றி தெரிவித்தும் இது போன்ற பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.






