என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.2 கோடியில் சீரமைப்பு"

    • ரவுண்டுரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1½கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
    • மேலும் 2 இடங்களில் நவீன கழிப்பறைகள், மனதை கவரும் பூந்தோட்டம், அமைதி சூழல் ஏற்படுத்தும் வகையில் சீரமைக்கப்பட உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு எனப்படும் வட்டச் சாலை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். 1½ கி.மீ சுற்றளவு கொண்டது. குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி. குண்டும் குழியுமாக இருந்த ரவுண்டு ரோடு சாலையை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அப்போதைய திண்டுக்கல் நகராட்சி சேர்மனாக இருந்த நட ராஜன் முயற்சியில் சிமெண்ட் சாலை அமைக்க ப்பட்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாக மாற்றப்பட்டது.

    தற்போது 1000க்கும் மேற்பட்டோர் இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1½கோடி மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. இந்நிலை யில் ரவுண்டு ரோடு பகுதி மேலும் தரம் உயர்த்தப்பட்டு மிளிரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ள தாக கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது,

    தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நடப்போம், நலம் பெறு வோம் என்ற இயக்கத்தின் மூலம் நடைபயிற்சி திட்டத்தை தொடங்கி உள்ளது. திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி பகுதியில் இந்த இயக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே அதிகளவு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரவிலும் நடைபயிற்சி செய்யும் வகையில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

    இதற்காக ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது . சாலை ஓரத்தில் வண்ண பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மின் விளக்குகள், அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 2 இடங்களில் நவீன கழிப்பறைகள், மனதை கவரும் பூந்தோட்டம், அமைதி சூழல் ஏற்படுத்தும் வகையில் அழகு செடிகள், தன்னம்பிக்கை வரிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு வந்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×