என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்"

    • கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் இவர்களது வீட்டின் மின்பெட்டி பாதுகாப்பற்ற முறையில் இருந்தது.
    • இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என தெரிகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள். இவர்கள் 2 பேரும் கூலித்தொழி லாளர்கள். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில் அழகுமீனா (வயது18), மகன் குமார் (6) ஆகியோர் மட்டும் நேற்றுவீட்டில் இருந்தனர்.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் இவர்களது வீட்டின் மின்பெட்டி பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இது குறித்து சுந்தரம் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து மின் பெட்டியை மாற்றி தருமாறு கூறி உள்ளார். ஆனால் மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் குமார் சுவிட்சை போட முயன்றார். அப்போது தகர கதவில் மின்சாரம் பாய்ந்து குமார் தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற அழகுமீனா சென்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்கள் உடல் பிரேதபரிசோதனை செய்ய ப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் உடல்களை வாங்க மறுத்து அரசு மருத்துவக்கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டது. நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×