என் மலர்
நீங்கள் தேடியது "ஐசிசி கிரிக்கெட் ஆண்கள் உலக கோப்பை"
- தொடர் நாயகன் விருதை 7 முறை வென்றவர் யுவராஜ் சிங்
- இருவரும் மைதானத்தில் 100 சதவீத அர்ப்பணிப்பை வழங்கினோம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் (41).
டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 என சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் யுவ்ராஜ். இடக்கர பேட்ஸ்மேனான யுவ்ராஜ், ஒரு ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர் நாயகன் விருதை 7 முறை வென்றவரான யுவ்ராஜ், 2011 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி தொடரில் ஒரே மேட்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 50 ரன்களையும் அடித்து சாதனை படைத்தார். 2011 போட்டி தொடரில் "தொடர் நாயகன்" விருதையும் வென்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியுடனான தனது உறவு குறித்து யுவ்ராஜ் மனம் திறந்து விரிவாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் அல்ல. கிரிக்கெட் எங்களை இணைத்தது. எங்கள் இருவரது வாழ்க்கைமுறையும் வெவ்வேறானவை. ஆனால், கேப்டனாக அவரும், துணை கேப்டனாக நானும், மைதானத்தில் இறங்கினால் எங்களின் 100 சதவீத அர்ப்பணிப்பை வழங்கினோம். சில சமயங்களில் அவர் எடுக்கும் முடிவுகளில் எனக்கும், நான் எடுக்கும் முடிவுகளில் அவருக்கும் உடன்பாடு எழாமல் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் விளையாடும் போது அவர் 100 எடுக்க நானும், நான் 50 எடுக்க அவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொண்டுள்ளோம். இப்போது இருவரும் ஓய்வு பெற்றாலும், எப்போதாவது சந்தித்து கொள்ளும் போது கடந்த கால நினைவுகளை அசை போடுவோம். எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி காலங்களில் அவரிடம் ஆலோசனை கேட்டேன். 'தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் உள்ளவர்கள் என்னை தேர்ந்தெடுப்பதாக இல்லை' என வெளிப்படையாக தோனி கூறினார். சக வீரர்கள் தங்களுக்குள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாக வேண்டும் என கட்டாயமில்லை. விளையாடும் 11 பேரும் நட்பு ரீதியாகவும் இணைந்தே ஆக வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை.
இவ்வாறு யுவ்ராஜ் சிங் தெரிவித்தார்.






