என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே போலீசாருக்கு தகவல்"

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்
    • வேலை கிடைக்காததால் விரக்தி

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 28). வருகிற 19-ந் தேதி நவீன் குமாருக்கு திருமண நடைபெற இருந்தது.

    இதனால் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். தனக்கு திருமணம் நடைபெற இருந்ததால் தன்னை நம்பி வரும் பெண்ணிற்காக நவீன் குமார் வேலை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் வேலை கிடைக்காததால் திருமணம் ஆனபின் மனைவியை எப்படி காப்பாற்றுவது என விரக்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை கேதாண்டப்பட்டி யார்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக சென்னை- மைசூர் செல்லும் ரெயில் முன் திடீரென பாய்ந்தார்.

    இதில் நவீன் குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணை

    மேலும் வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலை கிடைக்காததால் திருமணமான பின்பு மனைவியை எப்படி காப்பாற்றுவது என்ற விரக்தியில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×