என் மலர்
நீங்கள் தேடியது "சராயம்"
- மக்கள் வேலை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு ஆந்திர மாநிலம் இல்லத்தூர் எல்லை வழியாக விஜயபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
- துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அரும்பாக்கம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்:
திருத்தணி அருகே ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது அரும்பாக்கம் ஊராட்சி. இந்த கிராம மக்கள் வேலை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு ஆந்திர மாநிலம் இல்லத்தூர் எல்லை வழியாக விஜயபுரத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக எல்லையில் உள்ள அரும்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் ஆந்திராவை சேர்ந்த மர்ம கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சி தமிழக எல்லைப் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அரும்பாக்கம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






