என் மலர்
நீங்கள் தேடியது "அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது"
- விடுதிகள், கடைகள் போன்ற இடங்களில் சோதனை செய்தனர்
- போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை
வேலூர்:
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாவட்டங்களில் வேலூரும் ஒன்று. இங்குள்ள மருத்துவமனைக்கு அசாம், ஒடிசா, மேற்குவங்காளம், கொல்கத்தா, பீகார், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். பலர் மாதக்கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுதவிர தொழில் நிமித்தமாகவும் ஏராளமானவர்கள் வேலூரில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வேலூரில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி வேலூரில் வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து இந்த பணியை மேற்கொண்டனர்.
கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி வரை ஆய்வு செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.தங்கும் விடுதிகள், கடைகள் போன்ற இடங்களுக்கு அவர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உண்மையான முகவரியா?, முகவரி மாற்றம் செய் தவர்களில் யாராவது போலி யாக முகவரி மாற்றம் செய் துள்ளார்களா? என்ற விவரங் கள் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, போலியான முகவரிகளை கொடுத்து தங்கி உள்ளார்களா?, ஆதார் அட்டையில் போலி முகவரி மாற்றம் செய்துள்ளனரா? என்பது ஆய்வு செய்தோம். இதுவரை சுமார் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரை ஆய்வு செய்துள்ளோம். இதில் போலி முகவரியை யாரும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது அரசின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.






